செய்திகளும், எழும் கேள்விகளும் - மாயவள்

செய்தி: தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரில் இயங்கும் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து எதிர்வரும் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குப் பலம் சிதறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மாவை சேனாதிராஜா அழைப்பு விடுத்துள்ளார்.

கேள்வி: ‘அரசியலிலை இதெல்லாம் சகஜமப்பா’ என்று தமிழ்த் திரைப்படம் ஒன்றில் கௌண்டமணி கூறியதன் அர்த்தம் இது தானோ?

..........

செய்தி: கடந்த பங்குனி மாதம் இந்தியாவிற்குத் திரும்பிச் சென்ற இந்தியர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவரிடம் இருந்து உடுபுடவைகளை யாழ்ப்பாணத்தில் கொள்வனவு செய்த நான்கு குடும்பங்களுக்கு சுயதனிமைப்படுத்தல் உத்தரவை சிறீலங்கா அரசாங்கம் பிறப்பித்துள்ளது.


கேள்வி: இதைத் தான் தென்னையில் தேள் கொட்டினால் பனையில் நெறிகட்டும் என்று கூறுவார்களோ?

..........

செய்தி: கொரோனா கொல்லுயிரிக்கு எதிரான மருத்துவப் பணிகளில் ஈடுபடும் மருத்துவத்துறைப் பணியாளர்களுக்கு ஐந்து நட்சத்திர விடுதிகளில் இலவச விடுமுறைகளை ஏற்பாடு செய்து கொடுக்குமாறு சிறீலங்கா சுகாதார அமைச்சிற்கு கோத்தபாய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

கேள்வி: ஐந்து நட்சத்திர விடுதிகளை மருத்துவமனைகளாக மாற்றும் திட்டம் கோத்தபாய ராஜபக்சவிற்கு இருக்கின்றதோ?

..........

செய்தி: ஐக்கிய தேசியக் கட்சி இருகூறாகப் பிளவடைந்துள்ளதை அடுத்து அரசியலில் இருந்து ஒதுங்குவதற்கு மங்கள சமரவீர முடிவு செய்துள்ளார்.

கேள்வி: கடந்த காலத்தில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தாவியவர், இப்பொழுது அக் கட்சி இரு கூறாகப் பிளவடைந்துள்ள நிலையில் வேறு என்ன தான் செய்ய முடியும்?

..........

செய்தி: இலங்கையில் காட்டு விலங்குகளின் மாமிசங்களை விரும்பி உட்கொள்வோரின் எண்ணிக்கை அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளது.

கேள்வி: சீனாவில் தோன்றியது போன்று அடுத்த வகையான கொரோனா கொல்லுயிரி இலங்கையில் தோன்றி உலகெங்கும் பரவப் போகின்றதோ?

..........

5

செய்தி: அண்மைக் காலங்களில் இலங்கையில் வேற்றுக் கிரகவாசிகளின் பறக்கும் தட்டுக்கள் பறப்பது பொதுமக்களால் அவதானிக்கப்பட்டுள்ளது.

கேள்வி: வேற்றுக் கிரகங்களில் இருந்து பூமிக்கு வந்து இலங்கையைத் தலைமையகமாகக் கொண்ட கிரகம் கடந்த அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு வேற்றுக் கிரகவாசிகள் திட்டமிட்டுள்ளார்களோ?