மக்கள் போராட்டம் - ஏகாதிபத்தியத்தின் அடிமடியில் வைக்கப்பட்ட தீ!! - சோழ.கரிகாலன்

உலகத்தின் ஏகாதிபத்திய சக்தியாகவும், உலகின் தீர்மானங்களைத் தானே எடுப்பதாகவும் மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்கா, மூச்சுத் திணறிப் போய் உள்ளது. ஒரு கறுப்பின இளைஞனின் மூச்சை நிறுத்திய அமெரிக்கா, போராட்டங்களினால் மூச்சு விட முடியாமல் தவிக்கின்றது. மிகவும் மோசமான ஒரு ஜனாதிபதியின், மோசமான நிர்வாகத் திறன் நாட்டைத் துண்டாடத் தொடங்கி உள்ளது.

1

ஒரு இலட்சத்திற்கும் அதிகமான கொரோனாச் சாவுகளும், நாடு முழுவதும் பற்றியெறியும் இனப்பாகுபாட்டிற்கான அநீதியும், அமெரிக்காவின் கோர முகத்தை உலகம் பார்க்க ஆரம்பித்துள்ளது. மற்ற நாடுகள் மீது குண்டுகள் வீசி, அவர்களைப் பயங்கரவாதிகள் என்று சொன்ன அமெரிக்கா, இன்று குண்டுவீச்சை விட மோசமான அழிவிற்கு உள்ளாகி உள்ளது.

1

பல நாட்டின் விடுதலைப் போராட்டங்களளை அழிக்க உதவிய அமெரிக்கா, இன்று அதற்கான வினையை அறுவடை செய்ய ஆரம்பித்துள்ளது.

நவம்பர் மாதம், இன்று நாட்டை மிக மோசமான வன்முறையான சட்டதிட்டங்களுடன் ஆளும் குடியரசுக் கட்சியினை, அல்லது எவராலும் கவரப்படாத, ஆர்வமற்ற உபஜனாதிபதியின் ஜனநாயகக் கட்சியினை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் இரண்டுமே அமெரிக்காவைக் காப்பாற்றப் போவதில்லை.

1

இனத்துவேசங்களற்ற சமரசமற்ற ஒரு சிறந்த அமெரிக்காவை உருவாக்க வேண்டும் என்று பேராடிய, பாதிரியாரான மார்டின் லூதர் கிங்கினைச் சாவடித்த அமெரிக்க அரசாங்கம், தொடர்ச்சியாக இனத்துவேசத்தின் படிநிலையில் மிக மோசமாக முன்னேறிக்கொண்டே உள்ளது. தொடர்ச்சியான நிறவெறி  கொண்ட அமெரிக்கக் காவற்துறையினரின் வன்முறையில், ஆயுதங்கள் எதுவுமற்ற, ஆபிரிக்க அமெரிக்க இளைஞனான ஜோர்ஜ் புளொய்டின் படுகொலை, அமெரிக்காவின் 350 நகரங்களில், போராட்டங்களை வெடிக்க வைத்துள்ளது.
கொடூரமான ஒரு காவற்துறை அதிகாரியின் கொடிய வன்முறையில்,  கிட்டத்தட்ட 9 நிமிடங்கள் தன் மூச்சிற்காகப் போராடி ஜோர்ஜ் புளொய்ட் "என்னால் சுவாசிக் முடியவில்லை" (I can't breathe) எனக் கெஞ்சிச் சாவடைந்தமை, உலகம் முழுவதும் காவற்துறையினரின் அடக்குமுறைகளிற்கு எதிராகப் போராடும் ஓர் ஆயுதம் ஆகி உள்ளது.

4

எத்தனையோ தடவைகள் ஆபிரிக்க-அமெரிக்க இளைஞர்கள் காவற்துறையினரின் வன்முறையில் சாவடிக்கப்பட்டமைக்கெல்லாம் சேர்த்து ஒரே முறையாக வெடித்து எழுந்துள்ளார்கள். இதே ஆபிரிக்க அமெரிக்கர்கள், இன்னமும் அமெரிக்காவில் மிகவும் மோசமான பாடசாலைகளுடன், மோசமான தொழில்வாய்ப்புகளுடன், மிகவும் மோசமான சுகாதாரம், மோசமான வாழ்க்கை என்பவற்றிற்குள் சிக்கிப்போய்த்தான் உள்ளனர். உலகத்திற்கு எஜமான் போல் நிற்கும் அமெரிக்காவின் கொல்லைப்புறத்தில், இனவேறுபாட்டுச் சகதிக்குள் மிகவும் மோசமான நிலையில் பெருந்தொகையான மக்கள் வாழந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

1

கொரோனாவால் அமெரிக்கா திணறும்போது, இந்த மோசமான வாழ்வாதாரத்துடன் இருக்கும் மக்களே மேலும் மோசமான நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள். பணக்காரப் பகுதிகளைக் காப்பதற்காகக் காவற்துறையினர், இந்த மக்களைத் தொடர்ந்தும் அடக்குறைகளிற்குள்ளேயே தான் வைத்துள்ளனர்.

ஆனால் அந்த அடக்குமுறைகளிற்குள் இருந்து தற்பொழுது மிகவும் வலுவான உரத்த குரல் எழுந்தவுடன் அதிகாரவர்க்கம் ஆடித்தான் போயுள்ளது. 1968 இல் மார்டின் லூதர் கிங்கின் படுகொலையுடன் ஆரம்பித்த கலவரங்களும் போராட்டங்களும், தொடர்ந்தும் சுழற்சி முறையில் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

4

அனால் தற்போது, அடக்குமுறையாளர்கள் அதீத வன்முறைகளை இந்த மக்கள் மீது ஏவிவிட்டுள்ளார்கள். பேராடிக்கொண்டு நின்ற மக்களின் மீது காவற்துறை வானகனம் புகுந்து மக்களை நெரித்துக் கொன்றுள்ளது. ஆயுதங்கள் அற்று அமைதியாகப் போராடிய மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

4

ஆனாலும், இந்தக் குற்றவாளிக் காவற்துறையினர் தண்டிக்கப்படாமல், காவற்துறை இயந்திரம் அவர்களைக் காப்பாற்றி வருகின்றது. ஏகாதிபத்திய அரசின் கரங்கள் இந்தக் குற்றவாளிகளை அரவணைத்து வைத்துள்ளது.

வேறு எந்த நாடுகளிலும் இல்லாதவாறு சாதாரண மக்களிடம் அதிகளாவன ஆயுதங்கள் உள்ள நாடு அமெரிக்கா ஆகும். கடமையசை; செய்யச் செல்லும் காவற்துறையினரில் வருடத்திற்கு 50 பேரிற்கும் அதிகமாகச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதனால் காவற்துறையினர் பிரோகிக்கும் அதீத பலம்வாய்ந்த நடவடிக்கைகளை அரசாங்கம் கண்டு கொள்வதில்லை. ஆனால் காவற்துறையினரோ இந்த வன்முறைகளை, ஒடுக்கப்பட்ட, வறுமையில இருக்கும் மக்கள் மீதே பிரயோகித்து வருகின்றது.d

டொனாலட் ட்ரம்பின் அரசாங்கம், காற்துறையினரின் வன்முறை நடவடிக்கைகளை மக்கள் கட்டவிழ்த்து விட்டுள்ளது.

அடக்கப்படும் மக்களின் குரல்கள நசுக்கப்பட்டே வருகின்றது. இதனால் இவர்களிற்கான தற்பாதுகாப்புகளும் அனுமதிக்கப்படுவதில்லை. அதனாலேயே பொதுவெளியில் பொருட்களை எரித்தும் உடைத்தும் போராட்டத்தை ஆரம்பித்தனர். இப்டிச் செய்ததனால் மட்டுமே, இந்தக் குரல்வளை நசுக்கப்பட்ட இனத்தின் குரல், சர்வதேசத்தின் காதுகளையும்  பார்வையையும் ஒருசேரத் தட்டி உள்ளது. விiயாட்டு வீரர்கள், பெரும் நிறுவனங்கள் என இந்தப் போராட்டங்களில் தம்மை இணைத்துள்ளனர்.

d

கறுப்பின மக்களின் உரிமைகளிற்காகப் போராடிய மார்ட்டின் லூதர் கிங் 1968 இல் படுகொலை செய்யப்பட்டபோதும் இதே போல்தான் மக்கள் போராடினார்கள். ஆனாலும் அப்போது அவர்களின் குரல் வெகு தொலைவிற்குக் கேட்கப்படவில்லை.

'ஒவ்வொரு கலவரத்திற்கும், போராட்த்திற்கும் ஒரு இலக்கு உண்டு' என்ற மார்ட்டின் லூதர் கிங் இன் வாரத்தைகள் இப்போது மீண்டும் அமெரிக்காவிற்குத் தேவையாக உள்ளது.

e
ஆனால் இந்தப் போராட்டங்களைத் தனது முதலாளித்தவக் கண்ணோட்டத்துடன் மிகவும் கேவலப்படுத்தி வரும் ட்ரம்பின் அர்த்தமற்ற மோசமான கருத்துக்கள் பெரும் விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றது. பேராட்க்காரர்கள் மீது நாங்களை ஏவி விடுவேன் என்பதும், சொந்த நர்டு மக்கள் மீது இராணுவத்தை ஏவுவேன் என்பதும், இமரிக்காவின் மிகுவும் மோசமான ஒரு ஜனாதிபதியை இனங்காட்டி உள்ளது. கொரோனத் தடுப்பு நடவடிக்கைகளிலும் இவரின் கையாலாகத்தனம் வெளிப்பட ஆரம்பித்துள்ளது.

இன்றைய போராட்டமானது, அனைத்து இன மக்களையும் ஒரே திசையில் ஒன்று திரட்டி வருகின்றது. இது எதிர்காலத்திற்கான, மிகவும் வலுவான ஓர் உறுதியான அரசியலைக் கட்டியெழுப்ப முடியும்.

ட்ரம்ப் நான்கு வருடங்களாக, நாட்டைத் துண்டதுண்டாகப் பிரித்துத் தன் அரசியலைச் செய்து வந்துள்ளார். ஆனால் இந்த மக்கள் போரராட்டம், இந்த அடக்குமுறையாளனின் அடிமடியில் தீயைச் சொருகி உள்ளது. இந்தத் தீயின் வெப்பம், இன வேறுபாடுகளற்ற ஒரு புதிய மக்கள் அரசைத் தோற்றுவித்தால் மட்டுமே இனிமேல் அமெரிக்காவால் எழுந்து நிற்க முடியும்.

அடக்கப்பட்ட மக்களின் குரல், ஒருநாள் ஒன்றாக ஓங்கி ஒலிக்கும்போது, அடக்குமுறை, இனவாத, இனப்படுகொலை அரசுகளின் தலைகளில் அது தீப்பிழம்பாக வீழ்ந்து அவர்களைச் சுட்டெரிக்கும் என்பது திண்ணம்.