ஆரால் கேடு? வாயால் கேடு! - பிலாவடிமூலைப் பெருமான்

வணக்கம் பிள்ளையள்.

என்ன எல்லோரும் சுகமாக இருக்கிறியள் தானே?

இண்டைக்கு என்ன பெருமான் குசியாய் இருக்கிறார் என்று நீங்கள் தலையைப் பிய்ச்சுக் கொள்ளுறது எனக்கு விளங்குது. இதிலை என்ன இரகசியம் கிடக்குது? எல்லாம் எங்கடை கருணா வைரஸ் அவிழ்த்து விட்ட கப்சாவைக் கேட்டதில் இருந்து வந்த குசிதான் பிள்ளையள்.

1

அந்த நாட்களில் எங்கடை ஊரிலை விநாயகம் எண்டொருத்தர் இருந்தவர். விநாயகம் எண்ட பேரைக் கேட்டதும் நான் ஆரையோ வம்புக்கு இழுக்கிறன் எண்டு மட்டும் நினைச்சுப் போடாதேயுங்கோ. மெய்யாகத் தான் சொல்லுறன் பிள்ளையள். அவருக்குப் பேர் விநாயகமூர்த்தி. ஆனால் ஊரிலை எல்லோரும் அவரை விநாயகம் எண்டு தான் கூப்பிடுகிறவையள்.

4

ஆள் சும்மா வேலை வெட்டி இல்லாமல் ஊரிலை கட்டைப் பஞ்சாயத்துத் செய்து கொண்டு தான் திரிகிறவர். ஆனால் ஆளுக்கு ஏதோ விதானையார் கணக்கில் நினைப்பு. விநாயகத்தார் எங்கடை தெருவாலை சைக்கிளில் போகேக்குள்ளை எங்கடை வீட்டுக்கு கிட்ட வந்ததும் எழும்பி நிண்டு தான் சைக்கிள் ஓடுவார். எல்லாம் காரியத்தோடை தான் பிள்ளையள்.

எங்கடை கிணற்றடி, தெருப்பக்கமாக வேலியோரைத்தோடு தான் இருந்தது. தான் தெருவாலை போகிற நேரத்தில் கிணற்றடியில் எங்கடை வீட்டுப் பொம்பிளையள் ஆரும் குளிக்கீனமோ எண்டு பார்க்கிறதுக்காகத் தான் எங்கடை வீட்டுக்குக் கிட்ட வந்ததும் விநாயகத்தார் எழும்பி நிண்டு சைக்கிள் ஓடுவார். உது எங்கடை வீட்டுக்காரர் எல்லோருக்கும் தெரியும்.

4

அதாலை விநாயகத்தார் எங்கடை வீட்டைக் கடக்கேக்குள்ளை அவருக்குக் கேட்கிற மாதிரி எங்கடை ஆச்சி சத்தமாகச் சொல்லுவா: ‘சனியனுக்கு ஆசை இருக்கு தாசில் பண்ண. அம்சம் இருக்குது கழுதை மேய்க்க.’

இப்ப எதுக்கு சம்பந்தம் இல்லாமல் விநாயகமூர்த்தியரைப் பற்றி நான் கொஸ் அடிக்கிறன் எண்டு நீங்கள் குழம்புகிறது எனக்கு விளங்குது.

4

எங்கடை விநாயகமூர்த்தியரின் கழுதைப் புத்தி தான் கருணா வைரசுக்கும் இருக்குது பிள்ளையள். உதிலை பகிடி என்னவென்றால் உந்தக் கருணா வைரசின்ரை தகப்பனின்ரை பெயர் விநாயகமூர்த்தியாம். ஒரு வேளை எங்கடை ஊர் விநாயகமூர்த்தியருக்கும், கருணா வைரசுக்கும் ஏதாவது இரத்த பந்தம் கிந்தம் ஏதும் இருக்குதோ எனக்குத் தெரியாது பிள்ளையள்.

4

ஒழுக்கம் கெட்டுப் போய், மதியும் கெட்டுப் போய், கடைசியில் எங்கடை விடுதலைப் போராட்டத்தைச் சிங்களவனுக்கு காட்டிக் கொடுத்து எங்கடை மக்களின்ரை எதிர்காலத்தையே நாசமாக்கின கருநாகம் தான் கருணா.

சரி, செய்ததைத் தான் செய்தாய், கொக்கட்டிச்சோலையில் ஒரு பெண்சாதி, கிரானில் ஒரு வைப்பாட்டி, சொறிகல்முனையில் ஒரு டிங்கிரி நோனா எண்டு ஊருக்கு ஒரு பெண்சாதியை வைச்சுக் கொண்டு தண்ணியடிச்சுப் போட்டு வெய்யிலுக்குள்ளை விழுந்து கிடந்து சாகிறதை விட்டுப் போட்டு எம்.பி பதவிக்கு ஆசைப்பட்டு அலையுறாராம் இப்ப.

4

ஆனாலும் பாருங்கோ ஆளுக்கு எம்.பி பதவியில் ஆசை வந்தது நல்லதுக்குத் தான். அதிஸ்டம் தபாலில் வந்தால், தரித்திரம் தந்தியில் வரும் என்கிற கதையாக ஆனையிறவில் ஒரே இரவில் இரண்டாயிரத்தில் இருந்து மூவாயிரம் சிங்கள ஆமிக்காரனுகளைப் போட்டுத் தள்ளியதாக கொஞ்ச நாளைக்கு முதல் நாவிதன்வெளியில் நடந்த தேர்தல் கூட்டத்தில் ஆள் விட்ட கப்சா தான் என்னை குசிப்பட வைச்சிருக்குது பிள்ளையள்.

உந்தக் கருணா இயக்கத்தில் ஒரு தளபதியாக இருந்ததும், ஜெயசிக்குறுய் எதிர்ச்சமருக்கான நடவடிக்கைத் தளபதி என்ற பதவியை இவருக்கு எங்கடை தேசியத் தலைவர் கொடுத்ததும் உண்மை தான்.

7

ஆனால் அதுக்காக ஆனையிறவில் ஒரே இரவில் இரண்டாயிரத்தில் இருந்து மூவாயிரம் ஆமிக்காரனுகளைத் தான் போட்டுத் தள்ளியதாக இவர் சொல்கிற கதையிருக்கெல்லோ, அதை விட பெரிய முசுப்பாத்தி இல்லை.

இரண்டாயிரத்துக்கும் மூவாயிரத்துக்கும் இடையில் ஆயிரம் பேர் வித்தியாசம் பிள்ளையள். தான் போட்டுத் தள்ளினது இரண்டாயிரமா, அல்லது மூவாயிரமா எண்டுகூட தெரியாதவரால் எப்படித் தான் ஒரே இரவிலை இவ்வளவு ஆமிக்காரனுகளையும் போட்டுத் தள்ள முடியும்?

சரி, அப்பிடித் தான் செய்திருந்தாலும், ரம்போ படத்தில் வருகிற மாதிரி இயந்திரத் துப்பாக்கியைத் தூக்கிப் பிடிச்சுக் கொண்டு நூற்றுக்கணக்கில் ஆட்களை சுட்டுத் தள்ளுறதுக்கு இவர் என்ன சில்வெஸ்ரர் ஸ்ரலோனே?

7

எது எப்படியோ. அதிகம் பேசுகிறவன், அதிகம் பொய் சொல்லுவான் எண்டு எங்கடை ஆச்சி அந்தக் காலத்தில் சொல்கிற மாதிரி, ஆள் விட்ட ரீல் இப்ப ஆளுக்கு எதிராகவே திரும்பியிருக்கிறது தான் பெரிய முசுப்பாத்தி.

உதை எல்லாம் சும்மா விடக்கூடாது எண்டு சிங்கள நாட்டிலை கொஞ்சப் பேர் இடுப்புக் கச்சையை வரிஞ்சு கட்டிக் கொண்டு கருணாவுக்கு எதிராகக் கிளம்பியிருக்கீனம். அதுவும் தான் கொரோனா வைரசை விடக் கெட்ட வைரஸ் எண்டு கருணா வைரசே சொல்லேக்குள்ளை, சிங்கள இனவாதம் என்ன இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மாவே இருக்கப் போகுது?

எது எப்பிடியோ, ஆற்றில் குளிக்கப் போய் கடைசியில் சேற்றைப் பூசிக் கொண்ட கதையாகத் தான் இப்ப கருணா வைரசின்ரை கதை நிற்குது.

எனக்கு ஒரு ஆசை பிள்ளையள். என்ரை கட்டை வேகிறதுக்குள்ளை எப்பிடியாவது கருணா வைரசை சிங்களச் சனம் நையப்புடைக்கிற காட்சியைக் காண வேணும். ஆரால் கேடு? வாயால் கேடு! என்கிற கதையாகக் கெதியில் கருணா வைரசுக்கு சிங்களச் சனம் செருப்படி கொடுக்கும் காட்சியைக் காணலாம் என்கிறதாகத் தான் இப்ப நடக்கிற விசயங்கள் எனக்குப் படுகுது பிள்ளையள். அதுக்காக என்னைக் கெதியில் கொரோனா வைரஸ் காவு கொண்டு போய் விடும் எண்டு நீங்கள் ஆரும் தப்புக் கணக்குப் போட வேண்டாம். வேறை என்ன பிள்ளையள்?

வரட்டே?