செய்திகளும், எழும் கேள்விகளும் - மாயவள்

செய்தி: ஒரே நாளில் 2000 தொடக்கம் 3000 சிறீலங்கா படையினரைத் தான் கொன்றதாக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கூறியதை சிலர் பெரிதுபடுத்துவதாகத் துரோகி கருணா ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

எழும்கேள்வி: அப்படியென்றால் 2000 தொடக்கம் 3000 படையினரைத் தான் கொன்றதாக கூறியது பொய் என்பதைக் கருணா ஒப்புக் கொள்கின்றாரோ?

. . .

செய்தி: ஒரே இரவில் 2000 தொடக்கம் 3000 படையினரைக் கொன்றதாகக் கருணா கூறியிருப்பது பற்றிய விசாரணைகளைத் தொடங்கியிருக்கும் சிறீலங்கா அரசாங்கம், கருணாவால் மேற்கொள்ளப்பட்ட சிறுவர் ஆட்சேர்ப்புக்கள் பற்றியும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தியுள்ளது.

எழும்கேள்வி: சிங்களப் படைகளின் ஒட்டுக்குழுவாக கருணா குழு இயங்கிய பொழுது துரோகி கருணாவால் மேற்கொள்ளப்பட்ட சிறுவர் ஆட்சேர்ப்புக்கள் பற்றி அன்றைய சிறீலங்கா பாதுகாப்புத்துறைச் செயலரும், இன்றைய சிறீலங்கா அதிபருமான கோத்தபாய ராஜபக்சவிற்கு தெரிந்திருக்காது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை நம்புகின்றதோ?

. . .

செய்தி: தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்கு என்று சிறீலங்கா அரசாங்கத்தால் ஜிகாத் ஒட்டுக்குகுழுவிற்கு வழங்கப்பட்ட ஆயுதங்களையே உயிர்த்த ஞாயிறு படுகொலைகளின் சூத்திரதாரியான சஹ்ரான் பின்நாட்களில் பயன்படுத்தியுள்ளார் என்பது விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

4
 

எழும்கேள்வி: இதைத் தான் ‘தன்வினை தன்னைச் சுடும்’ என்பார்களோ?

. . .

செய்தி: கொரோனாவைத் தோற்கடித்து அடுத்த மாதம் நாட்டில் இயல்புநிலையை அரசாங்கம் தோற்றுவிக்கும் என்று சிறீலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
 

எழும்கேள்வி: இயல்புநிலை இல்லை என்று கூறிவிட்டு அடுத்த மாதம் பெருமெடுப்பில் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை நடத்தவா முடியும்?

. . .

4

செய்தி: ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் தான் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு முயற்சிகள் எடுக்கப்பட்டன என்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் விஜயகலா மகேஸ்வரன் கூறியுள்ளார்.
 

எழும்கேள்வி: அப்படி என்றால் அடுத்த தீபாவளிக்குள் சமஸ்டி கிடைக்குமா?

. . .

செய்தி: ஐ.நா.வின் அமைதிப் படைகளில் அங்கம் வகிக்கும் தமது சிப்பாய்களின் பாவனைக்கு என்று உள்ளுரில் தயாரிப்பட்ட பவள் கவச வாகனங்களை சிறீலங்கா படைத்துறை தலைமை வழங்கியுள்ளது.
 

எழும்கேள்வி: தமது படையினருக்கு எதிரான தாக்குதல்கள் எவையும் தமது ‘அமைதிப்’ படையினர் செல்லும் வெளிநாடுகள் எவற்றிலும் நிகழாது என்று சிறீலங்கா படைத்துறைத் தலைமை உறுதியாக நம்புகின்றதோ?