காற்றோடு காற்றாக... ஒரு கொலைக்கரத்தின் வீரியம்! - அநபாய சோழன்

எமது தேசியத் தலைவரின் அறிவுறுத்திலின்படி, புலம்பெயர் தேசத்தில் வாழும் நாம், வாழும் எமது வாழ்விடத் தேசங்களின் சட்ட திட்டங்களிற்குக் கட்டுப்பட்டு நடத்தல் வேண்டும். நம் மாணவர்களின் எதிர்காலமும் பிரான்சின் கல்வியமைச்சு எடுத்த முடிவுகளிற்கு உடன்பட்டதாகவே அமைவது மட்டுமே அறிவான செயலாகும்.

பெரும் தொற்று நோய்கான பரவல் முறையானது ஒரு நாற்றாண்டிற்கும் மேலாக மருத்தவ உலகத்திற்குச் சவாலாகவே இருந்து வந்துள்ளது. ஒவ்வொரு கிருமியின் உருவாக்கம் மற்றும் அதன் வீரியம் பற்றிய ஆய்வினை மேறகொள்வதில் பெரும் சிக்கலையே சந்தித்து வந்துள்ளனர். இது கொரோனா வைரசின் ஆராய்ச்சியில் பெரும் சிக்கைலயே வழங்கி உள்ளது. இதில் ஜெனீவாவைத் தளமாகக் கொண்ட உலக சுகாதார நிறுவனம் (றுர்ழு) இதில் பெரும் செயற்திறன் அற்றதாகவே இருந்து வருகின்றது.

z

தற்போது கொரோனா வைரஸ் காற்றலைகளில் (யசைடிழசநெ) பரவும் ஆபத்து உள்ளதென 200 காற்றலைப் பலவலிற்கான விஞ்ஞானிகள் (யநசழளழட ளஉநைnஉந) நிரூபித்துள்ளனர். இந்த விஞ்ஞானிகளின் எச்சரிக்கையானது உலக சுகாதார நிறுவனத்தால் அலட்சியப்படுத்தப்பட்டது மட்டுமல்லாமல், மக்களிற்கான எச்சரிக்கையையும் வழங்கத் தவறி உள்ளனர். இதனை மிக வன்மையாக இந்த காற்றலை விஞ்ஞானிகள் குழு கண்டித்துள்ளது.

"உலக சுகாதார நிறுவனம் மிகவும் மெதுவாகவே இயங்குகின்றது. இந்த இயங்கு திறனற்ற தன்மையால், இவர்களால் இந்தப் பேரழிவுத் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது. வெறுமனே அம்மை மற்றும் காச நோய்க்கான பரவல் தத்துவத்தை வைத்துக் கொண்டே, இந்தப் பேரழிவுக் கொரோனா நோய்த் தொற்றை அணுகவே மட்டுமே இவர்களால் முடிந்துள்ளது. நோய் எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்வதை விட, யாரையோ காப்பாற்றும் முயற்சியில் மட்டுமே உலக சுகாதார நிறுவனம் ஈடுபட்டுள்ளது" என அமெரிக்காவின் கொலராடோ மாநிலப் பல்கலைக்கழகத்தின் இரசாயாண ஆய்வாளரான ஜோஸே ஜிமெனெஸ் பகிரங்கமாக உலக சுகாதார நிறுவனத்தினைக் குற்றம் சாட்டி உள்ளார்.

q

இந்தக் கொடும் கொரோனத் தொற்றானது, வெறுமனே நோய்த் தொற்றறிற்கு உள்ளானவருடனான தொடுகை மூலம் மட்டுமே பரவும் என்ற அதரப் பழசான சித்தாந்தத்தினை மட்டுமே உலக சுகாதார நிறுவனம் நிரூபிக்க முயல்கின்றது. என உலக சுகாதார நிறுவனத்தின் கருத்தினை 'கற்காலத் தத்துவம்' என, நவீன மருத்துவம் தூக்கிக் குப்பையில் வீசி உள்ளது.

இந்தக் கொடிய கொரோனா வைரசானது, காற்றலையில் பரவும் ஆபத்து உள்ளதென்பதை மருத்துவ உலகம் கருத்தில் கொள்ள வேண்டும் என அமெரிக்காவின் மேரிலாண்ட்  பல்கலைக்கழகத்தின் காற்றலை நுன்னுயிரியல் ஆராய்ச்சியில் நிபுணத்துவம் பெற்ற டொக்டர் டொனால்ட் மில்டன், சர்வதேச மருத்துவத் துறையினர்க்கு ஒரு திறந்த மடல் மூலம் ஆதாரங்களுடன் அறிவித்துள்ளார்.

இந்த ஆபத்தினை உலக சுகாதார நிறுவனம் உணர்ந்து கொள்ளத் தவறியுள்ள நிலையில், இந்த யதார்த்தத்தினை டொனால்ட் ட்ரம்பும் உணரத் தவறி பொறுப்பற்ற முறையில் தகவல்களை வழங்கியபடி உள்ளார்.

a

இந்தக் கொடிய வைரசின் காற்லைப் பரவலானது, மனித இனத்தின் வாழ்வியல் முறையைத் தலைகீழாகப் புரட்டிப் போடக் கூடியது. வெறுமனே ஒரு மீற்றர் பௌதீக இடைவெளி என்பது இந்தக் காற்றைலப் பரவலில் இருந்து எங்களைக் காப்பாற்றிக் கொள்ளப் போவதில்லை. கொரோனா நோயாளியின் தும்மல் மற்றும் இருமலில் வெளிப்படும் நோய்த்துணிக்கைகள் காற்றின் மூலம் பல மீற்றர்களிற்கு பரவக் கூடியது. இது எட்டு மீற்றர் தூரம் வரை பரவும் அபாயம் உள்ளது என காற்றியல் நுண்ணுயிர் விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். இந்த ஆபத்து மனித இனத்தின் கூடிவாழும் தன்மையை அழித்து, புதிய, மிகவும் அபத்தான, வாழ்வியல் முறையைக் கற்பிக்க உள்ளது. உயிராபத்தின் பேரச்சம் மனிதர்களிற்கிடையிலான இடைவெளியை அதிகரித்து, தனிமையான சுயநல வாழ்க்கை முறையை வழங்கிவிடும் ஆபத்தை நோக்கியே சென்று கொண்டுள்ளது.

நம் வாழ்விட தேசமான பிரான்சில், மீண்டும் பல தொற்றுத் தொகுதிகள் மீண்டும் இனங்காணப்பட்டுள்ளன. மீண்டும் ஓர் அபத்தான இரண்டாவது தொற்றலையை நோக்கி நாம் சென்று கொண்டுள்ளோம் என்ற எச்சரிக்கையை, பிரான்சின் விஞ்ஞான ஆராய்ச்சிக்குழு வழங்கி உள்ளது. தற்போது நிரூபிக்கப்பட்டுள்ள காற்லைப் பரவல், ஒரு நோயாளியில் இருந்து, பெருமளாவனர்களிற்காக பரவல், கொத்துப் பரவல்கள் என்பனவற்றை ஏற்படுத்தும் பேராபத்து உருவாகி உள்ளது.

e

இந்தப் பேராபத்து, பிரான்சின் கல்வியமைச்சினையும் பெரும் கேள்விக்குறிக்குள்ளாக்கி உள்ளது. ஏற்கனவே பிரான்சின் மிக முக்கியமான, மாணவர்களின் எதிர்காலத்தை முடிவு செய்யும் உயர்தரப் பரீட்சையாகிய, டீயஉஉயடயரசéயவ பரீட்சையினையே, மாணவர்கள் மார்ச் ஆரம்பம் வரையும், மற்றும் காணொளிக் கல்வியின் மூலம் நடந்த பரீட்சைப் புள்ளிகளின் அடிப்படையில் மட்டுமே கணக்கிட்டு, அவர்களிற்கான புள்ளிகள் வழங்கப்பட்டு, அவர்களின் பெறுபேறுகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கான பிரெஞ்சு வாய்மொழித் தேர்வும் இரத்துச் செய்யப்பட்டு அதற்கான முழுப்புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. அரையாண்டின் பெறுபேறுகள் மட்டுமே மாணவர்களிற்கான அடுத்த கட்ட நகர்வை உருவாக்கிக் கொடுத்துள்ளது.

மாணவர்களின் அடுத்த கல்வியாண்டானது, இதன்மூலம் செப்டெம்பர் மாதம் ஆரம்பிப்பதற்கு இது அவர்களிற்கு வழி செய்துள்ளது.

இது யாருமே சந்தித்திராத ஒரு அசாதாரண சூழல். இந்தப் பரீட்சைகளை பிரெஞ்சு அரசாங்கம், நடாத்தவது என அடம் பிடித்திருந்தால், இது ஒக்டோபர் நவம்பரிற்குப் பின்னர் மட்டுமே சாத்தியப்பட்டு இருக்கும். காரணம் பெப்ரவரி கடைசியுடன் நிறுத்தப்பட்ட பாடத்திட்டமானது முழுமை பெற்றதல்ல. அதனால் பரீட்சை என்பது சாத்தியமற்றது. மீண்டும் பாடத்திட்டம் செப்டெம்பரிற்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்டு பரீட்சை ஒக்டோர் நவம்பரில் நடாத்தப்படுமானால் பெறுபேறுகள் வழங்கி, அடுத்த கல்வியாண்டைச் சந்திக்க ஜனவரி மாதம் ஆகிவிடும். இதனால் முமுமையான கல்வியான்டை நடாத்துவதற்கு மீண்டும் ஆறு மாதங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும். இது முறையற்றது. முழுக் கல்வியாண்டுக் காலத்திலேயே பலரால் முழுமையான பாடத்திட்டங்களைக் கற்பிக் முடிந்திருப்பதில்லை.

இதனால் சூழ்நிலைக்கு ஏற்ப அறிவுசார்ந்த முடிவுகள் எடுக்கப்பட்டு, பிரெஞ்சு அரசாங்கம் மாணவர்களின் எதிர்காலத்தில் மட்டுமே அக்கைறை செலுத்தி உள்ளது. இதனையே தனியார் கல்வி நிறுவனங்களிற்கும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனையும் தாண்டி, பிரான்சின் கல்வியாண்டு இறுதியில் வழங்கப்படும் ஜுலை மற்றும் ஓகஸ்ட் மாதத்திற்கான விடுமுறை மாணவர்களிற்கு கட்டாயம் வழங்கப்படல் வேண்டும் என்றும், கல்வியமைச்சு அறிவுறுத்தி உள்ளது. இதற்குத் தனியார் கல்வி நிறுவனங்களும் வதிவிலக்காக முடியாது.

உள்ளிருப்பு அழுத்தத்தில் இரந்த மாணவர்களை மேலும் அழுத்தத்திற்கு உள்ளாக்குவது அவர்களின் உளவியலைப் பாதிக்கும் எனப் பிரான்சின் உளவியல் ஆய்வு நிறுவனங்கள் உறுதிப்படுத்தி உள்ளன. இதற்கு மேலான அழுத்தங்களை வழங்குவது, குற்றச் செயலாகவே பிரான்சின் மருத்துவம் மற்றும் சகதார நிறுவனங்களினால் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்றின் வீச்சம் மீண்டும் உச்சம் கொள்ளும் நிலையிலும், காற்றலைத் தொhற்றுக்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கமே திணறிக்கொண்டு உள்ளது. தனியாரிற்கு இது சாத்தியமற்றது.

எமது தேசியத் தலைவரின் அறிவுறுத்திலின்படி, புலம்பெயர் தேசத்தில் வாழும் நாம், வாழும் எமது வாழ்விடத் தேசங்களின் சட்ட திட்டங்களிற்குக் கட்டுப்பட்டு நடத்தல் வேண்டும். நம் மாணவர்களின் எதிர்காலமும் பிரான்சின் கல்வியமைச்சு எடுத்த முடிவுகளிற்கு உடன்பட்டதாகவே அமைவது மட்டுமே அறிவான செயலாகும்.