செய்திகளும், எழும் கேள்விகளும் - மாயவள்

செய்தி: 13ஆம் திருத்தச் சட்டத்தின் படி மாகாண சபைகளுக்கு உரித்தானதாக வரையறுக்கப்பட்டுள்ள காணிமற்றும் காவல்துறை அதிகாரங்களை இல்லாதொழிக்கப் போவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்றங்களுக்கான இராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கேள்வி: அப்படி என்றால் சம்பந்தரின் ஒற்றையாட்சிக்குள் சமஸ்டித் தீர்வுக்கு என்ன ஆயிற்று?

----------------------

செய்தி: வடக்கிலிருந்து தமிழ்ப் பிரிவினைவாதமோ கிழக்கிலிருந்து இஸ்லாமிய தீவிரவாதமோதலைதூக்குவதற்கு இடமளிக்கப் போவதில்லை என்று சிறீலங்கா பாதுகாப்புத்துறைச் செயலர் மேஜர் ஜெனரல்கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.

கேள்வி: அப்படி என்றால் தெற்கிலும், மேற்கிலும் சிங்கள பௌத்த இனவாதம் தலைதூக்கலாம் என்கிறோரோ?

----------------------

செய்தி: முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த தமிழினப் படுகொலைக்கு நீதி கோரப் போவதாக நாடாளுமன்றத்திற்குப்புறப்படும் முன் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கேள்வி: முள்ளிவாய்காலில் தமிழினப் படுகொலை அரங்கேறிய பொழுது விக்னேஸ்வரனுக்கு தொண்டைகட்டியிருந்ததோ?

----------------------

செய்தி: போதிய அளவு பணத்தைச் செலவிடத் தவறியதாலேயே நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்பார்த்தவெற்றியைப் பெற முடியவில்லை என்று தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

கேள்வி: இனித் தமிழரசுக் கட்சி பணநாயகக் கட்சியாக மாறுமோ?

----------------------

செய்தி: மேற்குலக நாடுகள் பலவற்றில் தூதரகங்களைத் திறந்து வைத்திருப்பதால் அரசாங்கத்திற்குஅனாவசியமான செலவீனங்கள் ஏற்படுவதாக புதிய சிறீலங்கா வெளியுறவுத்துறைச் செயலர் அட்மிரல் ஜயநாத்கொழொம்பேஜ் தெரிவித்துள்ளார்.

கேள்வி: எட்டாப் பழம் புளிக்கும் என்று கூறுவது புதிதா என்ன?

----------------------

செய்தி: கிரிக்கெட் விளையாட்டுக்கு மட்டும் தான் அமைச்சர் இல்லை என்று நாமல் ராஜபக்சதெரிவித்துள்ளார்.

h

கேள்வி: அப்படி என்றால் ரக்பி கப்டன் தாஜூதீனின் படுகொலையில் ராஜபக்ச குடும்பத்தின் பங்கு பற்றியநியாயமான விசாரணைகளை நாமல் மேற்கொள்வாரோ?