திலீபனின் ஈகம் - அதில், வந்திட்ட மாற்றம் இதில்.

திலீபனின் ஈகம் - அதில்,
வந்திட்ட மாற்றம் இதில்.

திலீபா, பார்  - தீபா!
பாரினில் உங்களால் - வரும் மாற்றத்தை,
தாயகத்தில் எழும் மாற்றத்தை,
பார் - திலீபா!
உங்கள் ஈகம் - உலகெங்கும்,
உரக்கக் பேசும்- நேரம் இது.
"மாற்றம்  ஒன்றே மாறாதது"
எதிரியின் குழந்தையும் - உங்கள் ஈகத்தை
புகழ்ந்து பாடும்
நேரம் இது.
எதிரி வீட்டுப் பாவலரின் எழுது கோலும்
உங்கள் ஈ கம் எழுதும்
நேரம் வந்துவிட்டது - திலீபா
எம்மை அழிக்கின்றவன்
நாட்டிலிருந்து வரும் புயல் கூட
தென்றலாய் பா ஓதும் காலம்
வந்துவிட்டது பார்த்தீபா.
கட்சிகளும் ஒன்று சேரும்
மக்களும் ஒன்று சேரும் நாளானது
நீங்கள் உண்ணா நோன்பு  இருந்த
இந்த புனித நாட்கள்.
உங்கள் கனவு நிறைவேறும்,
"மக்கள் புரட்சி வெடிக்கும்,
தமிழீழம் மலரும்"
அப்போது, உங்கள்
பசியும், தாகமும் தீரும் பார்த்தீபா.
அதுவரை பசியுடன்- நாங்களும் உங்களுடன்.

இளவாலையூர்க் கவி.