கொரோனா விதிகளின் மத்தியில் மாவீரர் நாளை நடாத்துவது எங்ஙனம்?

அசுர வேகத்தில் உலகத்தை நிலைகுலைய வைத்து வரும் கொரோனா கொல்லுயிரியால் இவ்வாண்டு புலம்பெயர் தேசங் களில் மாவீரர் நாள் நிகழ்வுகளை நடாத்துவது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு விதமான சட்ட திட்டங்கள் அமுலில் உள்ள நிலையில், சூமில் மாவீரர் நாளை நடாத்துவது பற் றியும் சில அமைப்புக்கள் ஆராய்வதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஆயினும் கடந்த ஏழு மாதங்களாக சூமில் நடைபெறும் நினைவு நிகழ்வுகளைப் பார்க்கும் பொழுது, அவற்றின் அபத்தத்தை புலம் பெயர் செயற்பாட்டாளர்கள் உணர்ந்து கொள்ளவில்லை என்று கூற முடியாது.

இந்நிலையில் நேற்று பிரித்தானியாவில் ஒரு இந்தியத் தம் பதிகளின் திருமண நிகழ்வு நடந்தேறியுள்ளது. பிரித்தானியாவில் 6 பேர் கூடுவதற்கு மட்டுமே தற்பொழுது அனுமதியுள்ளது. திருமண நிகழ்வுகளைப் பொறுத்தவரை 15 பேரும், மரண வீடுகளைப் பொறுத்தவரை 30 பேரும் கூடலாம்.

இப்படியிருக்கையில் 250 இற்கும் அதிகமான நண்பர்கள், உறவினர்களை அழைத்துத் தமது திருமண நிகழ்வை குறித்த இரு தம்பதிகளும் நடத்தியுள்ளார்கள். அதுவும் சட்டத்திற்கு உட்பட்டு!

அது எப்படிச் சாத்தியமாகும் என்று நீங்கள் கேட்கலாம். இதோ அந்த இரு தம்பதிகளும் கையாண்ட வழிமுறை இது தான். ஒரு பாரிய பூங்கா ஒன்று வாகனங்கள் தரித்து நிற்பதற்கான இடமாக மாற்றப்படுகின்றது. அங்கு உள்ளரங்கில் நடைபெற்ற நான்கு மணிநேரத் திருமண நிகழ்வு பூங்காவில் பொருத்தப் பட்டிருந்த பெரும் திரையில் நேரலையாகக் காண்பிக்கப்பட, நண் பர்கள், உறவினர்கள் தமது வாகனங்களில் அமர்ந்திருந்தவாறு திருமண நிகழ்வைக் கண்டு கழித்தார்கள்.

பின்னர் கொல்வ் விளையாட்டிற்குப் பயன்படுத்தப்படும் வாக னம் ஒன்றில் ஏறிப் பூங்காவை வலம் வந்த புதுமணத் தம்பதிகள், வாகனங்களில் அமர்ந்திருந்த நண்பர்கள், உறவினர்களிடம் ஆசீர்வா தம் பெற்றார்கள். தவிர வந்திருந்தவர்களுக்கு ரேக் எவே (எடுத்துச் செல்லும்) பாணியில் உணவும் வழங்கப்பட்டது.

இப்பொழுது எழும் கேள்வி இது தான்.

ஏன் இதே பாணியில் இவ்வாண்டுக்கான மாவீரர் நாள் நிகழ் வுகளைப் புலம்பெயர் தேசங்களில் இயங்கும் அமைப்புக்கள் நடத்த முடியாது?
ஒவ்வொரு நாடுகளிலும் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இவ்வாறான பூங்காக்களை அல்லது வாகனத் தரிப்பிடங்களை வாட கைக்கு எடுத்து அங்கு தற்காலிக மாவீரர் நினைவாலயங்களை நிறுவி, மாவீரர் நாளன்று அங்கு வாகனங்களில் வந்து, வாகனங் களில் இருந்தவாறே மக்கள் மலர் தூவி வணக்கம் செலுத்தி விட்டுச் செல்வதற்கு ஏற்பாடு செய்யலாம்.

அப்படி இல்லையயன்றால் இந்தியத் தம்பதிகளின் திருமணம் நடந்த பாணியில் வாகனங்களில் மக்கள் அமர்ந்திருக்க, பெரிய திரையில் வணக்க நிகழ்வுகளைக் காண்பித்து மாவீரர் நாளை நடத்தலாம்.

வெறுமனவே சூமில் நடத்தும் நிகழ்வுகளை விட இவ்வாறான நிகழ்வுகள் உணர்வுபூர்வமாகவும் அமையும், அதே நேரத்தில் பாதுகாப்பாகவும் இருக்கும்.

1

2

3