வையத் தலைமை கொள்வோம்!

மானமாவீரர்கள் நினைவொளி
மனமதில் நிறைய நிறைய
நனவாகும் அவர் கனவு.
நானிலத்தில்
நிறைவாய் மலரும்
தன்னிகரில்லாத் தமிழீழம்.
காலமிது காலமிது
தமிழின வரலாற்றில்
வராது வந்த மாமணியாம்
கரிகாலன் காலமிது.
அவர்காலத் தலைமுறை நாம்
தீதும் நன்றும்
தெளிவுறத்தான் அறிந்தபின்
ஒருபொழுதும் வீயேகழியாது
வீணர்கள் பற்றிப் பேசிப்பேசி
வேளையதைப் போக்காது
வரும் வரும் தலைமுறையயல்லாம்
எமை எண்ணியயண்ணி
நொந்து நொந்து வாழக்கூடாது.
தேசங்கள் எங்கினும்
நீறுபூத்த நெருப்பாய் இருப்பையும்
எம் கண் முன்னே
கொழுந்துவிட்டெரியும் நிலைமைகளும்
எல்லாம் அறிந்துகொண்டும்
தேம்புதலும் புலம்புதலும் வேண்டாம்.
தேரவாதம் தேறாது.
அதன் வழியில் நடக்கும்
தலைமைகளும் மாறது.
தம்பிள்ளைகளைத் தலைவர்களாக
வளர்த்துக்கொண்டு
சிங்களத்துக் குஞ்சு குருமன்களை
தலைமழித்துக் காவிகட்டி
தமிழின அழிப்புச் செய்து
தம் குழியைத்
தாமே வெட்டி
தறிகெட்டு நடக்கும்
பெளத்த பேரினவாத
வெறிபிடித்த சிங்களம்
ஒருநாளும் மாறாது.
கோணேஸ்வரிக்குக்
குண்டு வைக்கவும்
பார்வதி அம்மாவின்
எரிசாம்பலில்
நாயைச் சுட்டுப் போடவும்தான்
அவர்களுக்கு
கற்றுக்கொடுத்துள்ளரோ
மானமாவீரர்களும் மக்களும்
கொடுத்த விலையே
தமிழருக்கு ஆயுதம்
உறும் இன்னலுமில்லை
உயிரச்சமுமில்லை
ஒவ்வோர் வாய்ப்புக்களையும்
கெட்டியாகப் பற்றிக்கொண்டு
தனக்குவமை தானேயான
தமிழினத் தேசியத் தலைவர் வழியில்
விழிப்பும் வினைத்திட்பமும் கொண்டோராய்
தக்கோராய் மிக்கோராய்
உலகத் தமிழரெல்லாம்
தலைநிமிர்ந்து நடப்போம்
வெல்லும் தமிழீழம்.

-ச.இ