ரஜினி அரசியலுக்கு வர வேண்டும்!

தலைவா நீ வா தலைவா ..!
நீ ஜெயலலிதா அம்மாவை 1996 களில் எதிர்த்தீர்னு பேசிக்கிறாங்க. நாம மக்கள் பிரச்சனைக்கா எதிர்த்தோம்?
சொல்லு தலைவா ?

ஜெ.முதல்வராக இருந்த போது ,சாலையில் அந்தம்மா போற வரைக்கும் உங்க காரை நிறுத்தி வச்சுட்டாங்கனு கோவம். நீங்க துறை அதிகாரிகளிடம் போட்ட சத்தம் அந்தம்மா காதுக்கு போக காண்டான அந்தம்மா உங்க வீடு இருக்க போயஸ் தோட்டத்துக்குள்ளவே உங்க காரை விடாம நடந்து போக வச்ச வரலாறு எவனுக்கு தெரிய போகுது...
நீ வா தலைவா...!

எம்.ஜி.ஆர் பட கதாநாயகி லதா கிட்ட லவ்ஸ் விட்டு ராமாவரம் தோட்டத்துல எம்.ஜி.ஆர் கிட்ட செமத்தியா உதை வாங்கி ஓடி வந்த வரலாறு எவனுக்கு தெரியப்போவுது!
நீ வா தலைவா ..!

என்னமோ நம்ம திமுக வுக்கு 1996 ல ஆதரவு கொடுத்ததால தான் அதிமுக தோத்ததா பேசிக்கிறாங்க .. ஏற்கனவே அதிமுக ஆட்சில ஏற்பட்ட வெறுப்பூதி மு.க. மூப்பனார் கூட்டணி னு விழ இருந்த பனம் பழத்துல போய் உட்காந்துட்டு என்னால தான் ஜெ தோற்றார் னு அள்ளி விடுரோமே இது எவனுக்கு தெரியப் போகுது..
நீ வா தலைவா ..!

ஜல்லிக்கட்டு, ஹைட்ரோ கார்பன், காவிரி நீர் பிரச்சனை னு எதுக்குமே வாய் திறக்காம ஒன்னே காலணா க்கு பெறாத பண மதிப்பிழப்பு திட்டத்தை மோடி கொண்டு வந்த போது முதல் ஆளாய் ‘ஹேட்ஸ் ஆப் மோடிஜி’ னு வாழ்த்தி துண்டு போட்ட உன் லட்சணத்த எவன் கேள்வி கேட்க போறான் ..
நீ வா தலைவா...!

எல்லா நடிகர்களுமே தங்களால் இயன்றதை செய்யும் போது ,சத்தியராஜ் நம்மை விட அதிக நலத்திட்ட உதவிகள் செய்து விட்டு அமைதியாக இருக்கும் போது, ஜெஞ்சிட்டேன் ஜெஞ்சிட்டேன் னு பீத்துரோமே..!  
நீ வா தலைவா ..!

46 வருடம் தமிழ்நாட்டுல இருந்ததால நான் பச்சை தமிழன்னு நீங்க சொல்லும்போது , அப்ப 50 வருசமா பாணி பூரி வித்துட்டு திரியுர இந்திக்காரன் என்ன கிளி பச்சை தமிழனா னு கேட்டு எவனும் உன்னை செருப்புலயே அடிக்கலையே...
நீ வா தலைவா ..!

2004 எம்.பி தேர்தல்ல பா.ம.க போட்டியிட் ட 6 தொகுதியில் மட்டும் பாமாகவை எதிர்த்து ரசிகர்களை வேலை செய்யச் சொன்னதும் அந்த தேர்தலில் 6 தொகுதியிலுமே பா.ம.க அமோக வெற்றி பெற்றதும் (நம்ம மக்கள் செல்வாக்கு) இப்ப எவனுக்கு தெரியப்போவுது...!
நீ வா தலைவா ..!

60 வருசத்துக்கு மேல போராடுற ஐயா நல்லக்கண்ணுவை யார்னே தெரியாத இந்த கூட்டம் உங்களை வெறும் படத்துல நடிச்ச ஒரே காரணத்துக்கு தலைவன்னு சொல்லுதே .. இந்த மானங்க்கெட்ட தமிழர்களை ஆள...!
நீ வா தலைவா ..!    
 
வீரப்பன் கொல்லப்பட்ட போது ‘அரக்கன் ஒழிந்தான்’ னு திருவாய் மலர்ந்த உங்களை தமிழர்கள் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துல வச்சுருக்காங்களே அந்த பாவத்துக்காகவாது
நீ வா தலைவா ..!

நெய்வேலியில் காவிரிநீர் பிரச்சனைக்கு ஒட்டுமொத்த நடிகர் சங்கமே உண்ணாநிலை  போராட்டம் நடத்தியபோது நீ மட்டும் சென்னையில் உண்ணாநிலை போராட்டம் நடத்தி  பச்சைத் தமிழனென்று நிரூபித்த வரலாறை ரசிக குஞ்சுகள் மறந்திருப்பார்கள்
நீ வா தலைவா ..!

இவ்வளவு தியாகங்களை செய்த தலைவனே
நீ வா தலைவா ..!

தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களை ஒரு மாதம் கழித்து சென்று பார்க்கையில் ஒரு குண்டடிபட்ட போராளி உங்களை கேட்டானே  ‘நீங்கள் யாரென்று?’ நீங்கள் இப்போது யார் என்று சொல்ல வைக்கும் காலம் வந்துவிட்டது
வா தலைவா வா...

2015 சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 கோடி 10 கோடி 25 கோடி என்று வடநாட்டு rVருக்கான்கள் கொடுத்த போது இங்குள்ள அஜீத் விஜய் சூர்யா போன்றவர்கள் 50 லட்சம் ஒரு கோடி வந்து கொடுத்த போதும் நீ வெறும் 10 லட்சம் கொடுத்து விட்டு ஃபாரின் போய்விட்டாயே அதை மக்களுக்கு எடுத்து சொல்லும் காலம் வந்துவிட்டது
நீ வா தலைவா ..!

குரானாவுக்கு ராகவேந்திரா மண்டபத்தை கேட்டு விடுவார்களோ என்று பராமரிப்பு பணி என்று மூன்று மாதங்கள் அறிவித்தீர்களே... அதனை இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு காட்ட வேண்டும் அல்லவா
வா தமிழா வா

குரானா பாதிப்பால் ஆறு மாதங்கள் தொழில் இல்லை என்று வாடகையை தள்ளுபடி செய்ய நீதிமன்றத்தையும் நாடினோமே நாம் யாரென்று இந்த தமிழக மக்களுக்கு காட்ட வேண்டாமா
வா தலைவா வா

தன்னுடைய முதலீடுகளை எல்லாம் மராட்டியத்திலும் கன்னடத்திலும் நிறுமாணித்துவிட்டு தமிழக மக்களுக்கு பெப்பே காட்டினோமே இதனை தமிழக மக்கள் கொடுத்த அறிய வேண்டாமா
நீ வா தலைவா வா

எழுவர் விடுதலை பற்றி உங்களிடம் நிருபர்கள் கேள்வி கேட்ட போது ‘எந்த ஏழு பேர்?’ என்று கேட்டது தமிழக மக்கள் உணர வேண்டாமா...
வா தலைவா வா
வாரும்
வந்து பாரும்.

இணையவலையில், எழுதியவர் பெயரின்றிக் கிடைத்த கட்டுரை.