அடிவருடிகளை தோற்கடிப்பதே விடுதலைப் போராட்டத்திற்கு கிடைக்கும் பெரும் வெற்றி - தாயகத்தில் இருந்து காந்தரூபன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் இரத்தத்தாலும் சதையாலும் கட்டி எழுப்பப்பட்ட தமிழீழத் தாயகம் இன்று சிங்களத்திற்கு துதிபாடும் புல்லுருவிகளால் பேரினவாதிகளிடம் அடகுவைக்கப்படுன்றது. தமிழீழ விடுதலைப் போராட்டம் உச்சம் தொட்டிருந்த போது, கந்தக புகைக்கு அஞ்சி ஓடி ஒளிந்திருந்த தேசியத்திற்கு எதிரானவர்கள் இன்று தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கும் துர்ப்பாக்கிய நிலைமை தமிழீழத்தில் ஏற்பட்டிருக்கின்றது.

காலத்திற்கு காலம் தமிழர்களுக்கு துரோகிகள் முளைப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது வாய்த்திருப்பவர்தான் ஆபிரகாம் சுமந்திரன். முற்றுமுழுதாக புலி எதிர்ப்பாளரான சுமந்திரன், தமிழ் மக்களுக்கு தலைமை தாங்குவதற்கு முற்படுவது நகைப்புக்கிடமானது. கேலிக்கூத்தானது.

சுமந்திரன் தேசியப்பட்டியல் மூலமாக, திட்டமிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இறக்கப்பட்டவர். சிங்கள அரச தலைமையும் புலிகளுக்கு எதிரான வெளிநாட்டு சக்திகளும் இணைந்து சுமந்திரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் களம் இறக்கினார்கள். தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும் என்பதே இவருக்கு கொடுக்கப்பட்ட பணி. அதை அவர் கனகச்சிதமாக செய்து வருகின்றார்.

சுமந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இளநிலை ஆதரவாளர்களால் சாணக்கியன் என அழைக்கப்படுகின்றார். எனினும், பெரும்பாலான தமிழ் மக்கள் சுமந்திரனை சதிகார நரி என்றே அழைக்கின்றனர். தமிழ் மக்களுக்கு சதி செய்வதற்கு என களம் இறக்கப்பட்ட இவரை அடையாளம் கண்ட மக்கள் சரியான பட்டத்தை கொடுத்திருக்கின்றனர்.

சுமந்திரன் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு நேரெதிர் திசையில் பயணித்து வெற்றிபெற்று, அந்த வெற்றியின் மூலம் சிங்கள தேசத்திற்கு பல நன்மைகளை பெற்றுக்கொடுக்க எத்தனிக்கின்றார். கடந்த இருபது வருடங்களாக இதற்கு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகின்றார்.
சிங்கள நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியிருக்கின்றது. எதிர்வரும் யூன்; 20 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், அது பிற்போடப்படலாம் எனவும் பலர்  நம்புகின்றனர். எப்படியோ நடைபெறவுள்ள தேர்தலை ஒட்டியே சிங்கள ஊடகம் ஒன்றுக்கு சுமந்திரன் திட்டமிட்டு நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தை, அதுவும் தேசியத் தலைவர் பிரபாகரன் ஆயுதம் ஏந்தியதை தான் எப்போதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என அந்த நேர்காணலில் சுமந்திரன் கூறியிருக்கின்றார். இந்தக் கருத்தை கொழும்பிலும் சொல்லுவேன், யாழ்ப்பாணத்திலும் சொல்லுவென் என இறுமாப்புடன் கூறியிருக்கின்றார்.

இந்தக் கருத்தக்கள் அவரது வழமையான பாணிதான். அந்தக் கருத்துக்கள் அடங்கிய ஊடக நேர்காணலின் காணொளிப் பதிவை அவரது ஆதரவாளர்களை வைத்தே பொதுமக்கள் மத்தியில் வெளியிட்டு விமர்சனப் பேசுபொருளாக்கினார் சுமந்திரன். இதற்கு காரணம் இருக்கின்றது. இதுதான் அவரது நரி விளையாட்டு.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போதும் அவர் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார். அப்போதும் அது பேசுபொருளானது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட எதிர் அணியினர் சுமந்திரனை வசைபாடுவதில் நேரத்தை செலவிட்டனரே தவிர, தமது கட்சிக்கான தேர்தல் பிரச்சாரத்தை முறையாக மேற்கொள்ளவில்லை. இதன்மூலம் சுமந்திரன் முன்னிலைப்படுத்தப்பட, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பின்தள்ளப்பட்டது.  

கடந்த 2015 தேர்தல் காலத்தில், எந்த ஊடகமும் சுமந்திரன் மீதான வசைபாடலை பிரசுரிக்காமல் தவிர்த்துக்கொண்டதில்லை. அதிலும், குறிப்பாக, சுமந்திரனுக்கு எதிரான உதயன் பத்திரிகையும் ஏனைய தினக்குரல், வலம்புரி போன்ற பத்திரிகைகளும் சுமந்திரன் மீதான வசைபாடல்களை செய்தியாக்கியதன் மூலம் கட்டணம் இன்றி அவருக்கு தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டன.

ஒருபக்கம் தனக்கு எதிரான விமர்சனங்கள் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பேசுபொருளாகிக்கொண்டிருந்த சம நேரத்திலேயே யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களில் நூற்றுக்கணக்கானோரை பணம் கொடுத்து விலைக்கு வாங்கி, அவர்கள் மூலமாக வீடுகளில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டார் சுமந்திரன். (யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடத்திற்கு இது இழுக்கு)

தேசிய பட்டியல் மூலம் கூட்டமைப்பினுள் நுழைந்த சுமந்திரன், 2015 தேர்தல் மூலம் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதி என்ற அந்தஸ்துடன் கூட்டமைப்பில் சுகபோகங்களை அனுபவிக்கத் தொடங்கினார். அதன் பின்னர் சம்பந்தனுடன் சேர்ந்து ஏனையோரை புறந்தள்ளிவிட்டு, கூட்டமைப்பின் சிரேஷ்ட நிலைக்கு உயர்ந்தார், குறிப்பாக சொல்லப்போனால், சம்பந்தருக்கு அடுத்த நிலையில் வைத்து பார்க்கப்படும் நிலையை எதிர்ப்பின்றி தாமாகவே எடுத்;துக்கொண்டார்.

தற்போதும் தேர்தல் நெருங்கும் வேளை புலி எதிர்ப்பு கருத்துக்கள் மூலமாக ஊடகங்களில் பேசுபொருளாகி இருக்கின்றார் சுமந்திரன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு – கிழக்கில் அமோக வெற்றிபெறவேண்டும் என்பதில், அக்கட்சியை விடவும் சிங்கள பேரினவாதிகளும் சில வெளிநாடுகளும் அதிக அக்கறை கொண்டிருக்கின்றன. அவர்கள் மூலமாக தேர்தல் பிரச்சாரத்திற்கு என சுமந்திரனுக்கு பலகோடி ரூபா பணமும் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 தேர்தலில் சுமந்திரன் அதிகமான விருப்பு வாக்குகளை பெறுவதற்கு புதுவித உத்தி ஒன்றைக் கையாண்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய வேட்பாளர்களுக்கு ஆதரவான இடங்களுக்கு சென்ற சுமந்திரனின் ஆதரவாளர்கள், அந்தப் பிரதேசத்திற்குரிய வேட்பாளரை முன்னிலைப்படுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டதுடன், சுமந்திரனின் இலக்கத்திற்கும் ஒரு விருப்பு வாக்கை அளியுங்கள் என மக்களை அறிவுறுத்தினர்.

இவ்வாறு, சிறிதரன், மாவை சேனாதிராஜா, சித்தார்த்தன், சரவணபவன் போன்ற வேட்பாளர்களின் இடங்களில் அந்தந்த வேட்பாளர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு, சுமந்திரனுக்கு விருப்பு வாக்கு அளிக்கும் வகையில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. அத்துடன், கிறிஸ்தவரான சுமந்திரனுக்கு வாக்களியுங்கள் என தேவாலயங்களில் அருட்தந்தையர்கள் மக்களை அறிவுறுத்தினர்.

அவருக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபா பணமும் மதிய உணவும் இதர சலுகைகளும் வழங்கப்பட்டன. அதற்கு அப்பால் வாக்காளர்களுக்கு பணமும் மதுப்பிரியர்களுக்கு மதுவும் வழங்கப்பட்டது. இவ்வாறு மோசடி முறையிலேயே சுமந்திரன் கடந்த (2015) தேர்தலில் வெற்றிபெற்றார்.

அதேபோன்றே இந்த வருடமும் தேர்தல் பிரச்சாரத்தை ஒட்டி சுமந்திரன் பேசுபொருளாகியிருக்கின்றார். சிங்கள ஊடகம் ஒன்றை தமக்கு சாதகமாக பயன்படுத்தியிருக்கின்றார். இதன்மூலம் அவர் இரண்டு விடயங்களை அடைய முயற்சித்திருக்கின்றார்.

தமக்கு இலட்சக்கணக்கான மக்கள் வாக்களிப்பார்கள் என கூறுகின்ற சுமந்திரன், தாம் ஆயுதப்போராட்டத்தை விரும்பாத ஒருவராக இருக்கின்ற நிலையிலும் தமக்கு மக்கள் வாக்களித்திருக்கின்றனர் என்பதை வெளிப்படுத்தப்போகின்றார். ஆக, பெரும்பாலான தமிழ் மக்கள் பிரபாகரன் தலைமையிலான ஆயுதப்போராட்டத்தை விரும்பவில்லை என்பதை அவர் நிரூபிக்கவிருக்கின்றார்.

இதன்மூலம் 30 வருட ஆயுதப் போராட்டம், அதனால் ஏற்பட்ட உயிர்த்தியாகங்கள், அனைத்தும் தேவையற்றவை என்பதை பன்னாடுகளுக்கும் எடுத்துரைப்பதே சுமந்திரனின் இலக்கு.

இந்த இடத்தில்தான் தமிழ் மக்கள் விழிப்படைய வேண்டும். சுமந்திரனுக்கு வாக்களிக்கும் மக்கள் அனைவரும் ஆயுதப்போராட்டத்தை விரும்பாதவர்கள். முப்பது வருடங்களுக்கு மேலாக இடம்பெற்ற போராட்டத்தினால் நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீர்கள், இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழீழ மக்கள், இலட்சக்கணக்கான அங்கவீனர்கள், ஏராளமாக சொத்து இழப்புக்கள், இது எல்லாம் வீணானவை என்பதை இந்த தேர்தலின் பின்னர் சுமந்திரன் நிரூபிக்கப்போகின்றார்.

அன்புக்குரிய தமிழீழ மக்களே! புலம்பெயர் தேசத்து தமிழீழ உறவுகளே!

சுமந்திரன் என்ற சிங்கள அடிவருடி இந்த நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடிக்கப்பட்டால் அது தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு கிடைத்த பெரும் வெற்றியாகும். தமிழ் மக்கள் எப்போதும் யாருக்கும் விலைபோனவர்கள் இல்லை என்பதை சிங்கள அடிவருடிகளுக்கும் சிங்கள தேசத்திற்கும் பன்னாட்டு சமூகத்திற்கும் இடித்துரைக்க வேண்டும்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்ந்து பயணிப்பதற்கு சுமந்திரன் போன்ற அடிவருடிகளை எமது தேசத்தை விட்டு துரத்தவேண்டும். அப்பளுக்கற்ற தேசியத் தலைவர் பிரபாகரனின் தலைமையின் கீழ் இரத்தம் சிந்தி வளர்;த்த விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்த எவருக்கும் இடமளிக்க முடியாது.

சுமந்திரன் புலம்பெயர் தேசத்திற்கு வந்தால், அந்த தேசத் துரோகியை உங்களால் எப்படிக் கவனிக்க முடியுமோ அப்படிக் கவனிக்கவேண்டும். தாயகத்தில் உள்ள உங்கள் உறவினர்களுக்கு சுமந்திரனின் கபட நாடகத்தை தெரியப்படுத்துங்கள். எந்தவொரு தமிழ் மக்களின் வாக்குகளும் சுமந்திரனுக்கு அளிக்கப்படக்கூடாது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வடிவங்களும் தியாகங்களும் வார்த்தைகளால் வடிக்க முடியாதவை. முதலாவது தேசத் துரொகியை தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் தீர்த்துக்கட்டிய அந்த தருணத்தில் இருந்து முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மௌனிக்கும் வரை இடம்பெற்ற தியாகங்கள், வீர தீரங்கள் தமிழினத்தின் சாட்சியாக, கடைசித் தமிழன் வாழும் வரை பதியப்பட்டிருக்கவேண்டும்.

தமிழ் மக்கள் என்றோ ஒருநாள் தமிழீழத் தனியரசை நிறுவுவார்கள். அதில் எந்தவித சந்தேகத்திற்கும் இடமில்லை. எனினும், இதற்கான செயற்பாடுகளை நாம் இப்போதிருந்தே விரைவுபடுத்தவேண்டும். இதற்கு குறுக்கே நிற்கும் தடுப்புக்களை உடைத்தெறிந்து நாம் முன்னேறவேண்டும். அனைத்து தமிழ் மக்களுக்கும் இது சமர்ப்பணம்.